உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் ! கவிஞர் இரா .இரவி !

உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் !
கவிஞர் இரா .இரவி !

குடும்பம் என்ற மரத்தின் ஆணி வேர் பெண்கள் !
குடும்பத்தைப் பேணிக் காப்பது பெண்கள் !

பெண்ணில்லா வீடு வீடல்ல காடு !
பெண்ணே இருள் அகற்றும் விளக்கு !

அன்பு செலுத்தி வளர்ப்பது  அம்மா !
அறிவு சொல்லி வளர்ப்பது  அக்கா !

மாதா பிதா குரு  மொத்தம் மனைவி  !
மனிதவாழ்வில்  பெருந்துணை பெண்கள் !

பெண் இல்லையேல் ஆண் இல்லை !
பிறப்பு முதல் இறப்பு வரை துணை பெண்கள் !

ஒரு ஆண் படித்தால் அவனுக்கு நன்மை !
ஒரு பெண் படித்தால் குடும்பத்திற்கே நன்மை !

மெழுகென உருகி ஒளி தரும் பெண்கள் !
சந்தனமென தேய்ந்து வாசம் தரும் பெண்கள் !

தோணியென இருந்து கரை சேர்க்கும் பெண்கள் !
ஏணியென இருந்து வாழ்வில் உயர்த்திடும் பெண்கள் !

ஆறை  நூறாக்கும் ஆற்றல் மிக்கோர் பெண்கள் !
ஆறுதல் தந்து தேற்றி தெம்பு தரும் பெண்கள் !

கவலைகளை மறக்கடித்து மகிழ்விக்கும் பெண்கள் !
கண்ணை இமை காப்பது போல காக்கும் பெண்கள் !

நல்வழி நடத்திடும் நாயகிகள்  பெண்கள் !
நல்லவனாய் வாழ் வகை செய்திடும் பெண்கள் !

தென்றலை புயலாக்கத் தெரிந்தவர்கள்  பெண்கள் !
புயலைத் தென்றலாக்கத் தெரிந்தவர்கள்  பெண்கள் !

தன்னலம் மறந்து குடும்பநலம் காக்கும்  பெண்கள் !
தன்னிகரில்லா ஆற்றல் பெற்றோர் பெண்கள் !

பெண்களை மதிக்கும் சமுகம் சிறக்கும் !
பெண்களை மதிக்காத  சமுகம் சீரழியும் !

உலக அமைதிக்கு காரணம் பெண்கள் !
உலகில் போற்றப்பட வேண்டியோர் பெண்கள் !
--

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்