இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி !

இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி !
வாக்களிக்கப்  பணம் வாங்குவதில்லை என்று
வாக்காளர்கள் இனி ஒரு விதி செய்வோம் !

குளித்து விட்டு வந்து யானை தன் தலையில்
தானே மண்ணை அள்ளிப் போடுமாம் !

வாக்காளர்களும் வாக்களிக்க பணம் பெறும்
வழக்கத்திற்கு முடிவு கட்டுவோம் !

புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில்
விழுந்த மீனாய் துடிப்பதை நிறுத்துவோம் !

வாக்களிக்க வாங்கும் பணம் ஒரு நாள் இன்பம்
ஐந்து வருடங்கள் பெரும்  துன்பம் தரும் !

வேறு மாநிலங்களால் நடக்கவில்லை
வேதனை தரும் இந்த அவலம் !

தமிழகத்தில் மட்டுமே அரங்கேறி
தலைக்குனிவைத் தருகின்றது   !

கைநீட்டிப்   பணம் பெற்ற காரணத்தால்
கேள்வி அவர்களை கேட்க முடியவில்லை   !

கேவலமாக பார்க்கிறார்கள் வாக்காளர்களை
கௌரவமாக வாழ பணம் வாங்காதிருப்போம் !

நடந்தவைகள் போகட்டும் இனி
நடப்பவைகள் நல்லவையாகட்டும் !

--


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்